இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி, பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் பெருமாள் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், மாநில கைத்தறி சம்மேளன பொதுச்செயலர் ராதா, நிர்வாகிகள் சுப்பிரமணியன், ருக்மாங்காதன், செல்வராஜ், கோட்டைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போகலூர் ஜீவா, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் ராஜா, மதிமுக கட்சியைச் சேர்ந்த பிச்சைமணி, சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வேண்டும் .என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.