ராமநாதபுரத்தில் 4500 காலி பணியிடங்கள் நிரப்ப போட்டித் தேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை பிரிவு எழுத்தர் (LDC) / இளநிலை செயலக உதவியாளர் (ISA) அஞ்சல் உதவியாளர் (PA)/ வரிசையாக்க உதவியாளர் (SA) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) போன்ற பல்வேறு நிலைகளில் 4,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இப்பணிகளுக்கான கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.01.2022 தேதியில் 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 ஆகும்.
- இராமநாதபுரத்தைச் சார்ந்த +2 தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் இத்தேர்விற்கு தவறாது விண்ணப்பித்து ஒன்றிய அரசு பணிவாய்ப்பினை பெறலாம்.
- இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
- இதற்கான தேர்வுகட்டணம் ரூ.100/-ஆகும்.
- பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணிக்காலியிடங்களுக்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 16.12.2022 அன்று துவக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் தேர்விற்கு விண்ணப்பத்தமைக்கான விவரங்களோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற எண்ணில் வாட்சப் மூலமாகவோ தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.