அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
தொண்டர்கள் கோரிக்கை
அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ ராஜேந்திரனை ஜாதியை சொல்லி திட்டியதற்கான ஆதாரத்தை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றச்சாட்டு – உட்கட்சிப் பூசல்
ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு போக்குவரத்து துறையில் அரசு வழக்கறிஞர் பதவியை வழங்கியது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகிய இருவருக்கும் உட்கட்சிப் பூசல் இருந்து வந்தது.
சிவகங்கை – பூர்வீகம்
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக தலைமை அறிவித்ததில் இருந்து கட்சியில் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவ்வப்போது புகார்கள் தலைமைக்கு தொடர்ந்து புகார் அனுப்பி வந்தனர்.
கட்சி தலைமை – காரணம் தேடி
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அதிர்ப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை காரணம் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அரசு ஊழியர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்ததை ஆதாரமாக கொண்டு அமைச்சர் பதவியை மாற்றம் செய்திருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேந்திரன் – பேட்டி
இதுதொடர்பாக ராஜேந்திரன் கூறியதாவது,”நானும், பி.டி.ஓ அன்புக்கண்ணனும் அமைச்சரின் இல்லத்துக்கு சென்றோம். என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு பி.டி.ஓ, சேர்மேனுக்கு மட்டும் தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மன் சொல்வதை மட்டும் தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு பி.டி.ஓ தானே.”
அமைச்சர் – டிரான்ஸ்பர்
உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன். முதன்மைச் செயலாளர் பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை பிரிவை சேர்ந்த பி.டி.ஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் என்னை ஒருமையில் பேசினார்.
அமைச்சரின் உதவியாளர் – நடவடிக்கை.
உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசி வெளியே போங்கய்யா என அமைச்சர் பேசினார். என கூறினார்