பரமக்குடியில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கரோலின் சாந்தகுமாரி, ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பூப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் நீலகண்ட பூபதி முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கோரிக்கைகள்:
- பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியே தவிர வேறு எந்த பணியும் வழங்கக்கூடாது.
- அதேபோல் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணிகளை முடக்க கூடாது.
- ஜூலை 1- லிருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும்.
- நீண்ட நாட்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ள இ.எல் ஒப்படைத்து ஊதியம் பெரும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும்.
- உயர்கல்வி தகுதிகளுக்கு பேரறிஞர் அண்ணா ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மாற்றாமல் அப்படியே வழங்க வேண்டும்.
- 2004 – 2006 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை நியமன நாளில் இருந்து பணி வரன்முறை செய்திட வேண்டும்.
மாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.