ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதனை சுற்றியுள்ள பகுதியில் மக்களுக்கு அரசால் நிறைவேறப்படாத கோரிக்கைகளை பற்றி வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகமுதல்வர்ஆலோசனைப்படி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவின் பேரில் ஒவ்வொரு தொகுதியில் உள்ள நீண்ட நாள் நிறைவேற்றப்படாத முதல் 10 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்ற அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மூலம் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி ), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எம்.எல்.ஏ,க்களின் கோரிக்கை
இக்கூட்டத்தில் ஆட்சியர் குறிப்பிட்ட செய்தியில், ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய 4 தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் தலா 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கியுள்ள மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் அனைத்தும் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
முக்கியக் கோரிக்கைகளாக வைகை ஆற்றில் வரும் தண்ணீர் கடலுக்குச் செல்லாமல் பாசனக் கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் மலட்டாறு, குண்டாறு கால் வாய்களை சீரமைக்கும் பணி, பாசன கண்மாய்களை சீரமைத்து மதகு மற்றும் கலுங்குகள் போன்றவற்றை சீரமைத்தல், புதிதாக தடுப்பணை கட்டுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக அமைக்கப்பட வேண்டியவை
மேலும், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், புதிதாக தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைத்தல், கல்லூரிகளில் கூடுதலாக விடுதிவசதிகள்,குடிநீர் வசதி பணிகள் புதிய மேற்கொள்ளுதல், பாதாள சாக்கடை பணி போன்ற திட்டப் பணிகளை மேற்கொள்ள , ஆகியவை ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி கே.ஜே.பிரவீன்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வைகை ஆறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் நிறைமதி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.