Tuesday, June 6, 2023
Homeஅரசியல்நாடு முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்...

நாடு முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவு

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விஞ்ஞானிகள் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை கலந்தாலோசித்து வருகிறது.

விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதுகுறித்து மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறோம்

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இதுவரை 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 67% பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு விட்டதாக கூறிய அவர், மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

சிறார்களுக்கு தடுப்பூசி

இந்நிலையில் நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது.

இதற்காக இதுவரை 8 லட்சம் சிறுவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்திலும் இன்று சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்த சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள். பள்ளிகூடங்கள், சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 25-ந் தேதி இரவு வெளியிட்டிருந்தார். முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் வரும் 10-ந் தேதி முதல் போடப்படுகின்றன.

 

அமைச்சர் ஆலோசனை

அமைச்சர் ஆலோசனை

கொரோனா தொற்றுக்கு எதிரான பொது சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.

15-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் சமீபத்திய முடிவைச் செயல்படுத்துதல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஏற்பாட்டின்படி இது நடத்தப்பட்டது. மா.சுப்பிரமணியன் (தமிழ்நாடு), என்.கே.தாஸ் (ஒடிசா), டாக்டர் பிரபுராம் சவுத்ரி (ம.பி.), சத்யேந்திர ஜெயின் (டெல்லி), அனில் விஜ் (ஹரியானா), கேசப் மகந்தா( அஸ்ஸாம்) உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Also read || ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது இந்தியா மார்ட் நிறுவனம்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments