கமுதி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் தமிழ்ச் செல்வி போஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை,ராஜகோபாலன் கிராம ஊராட்சிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக வைச்சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசு அறிக்கை
பேரையூர் பகுதிக்கான கோரிக்கை களை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது,அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர் தரையில் அமர்ந்து ஒன்றியக் குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒன்றியக் குழு தலைவி தமிழ்ச்செல்வி போஸ்
பேரையூர் ஊராட்சியில் மேட்டுப்பட்டி, பீட்டர்புரம், சாமிபட்டி, சேர்ந்தக்கோட்டை, செங்கோட்டைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2020-21 நிதியாண்டில் ரூ.94.71 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22 நிதியாண்டில் ரூ.59.62 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன்.
நடப்பு நிதியாண்டில் கோயிலுக்கு சாலை அமைத்தல் பேரையூர் பள்ளிவாசல் தெருவில் பேவர் பிளாக் சாலைப்பணிகளுக்கு ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. என்று ஒன்றியக் குழு தலைவி தமிழ்ச்செல்வி போஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.