கலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி தொழில்
கப் சாம்பிராணி தொழில் செய்வதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் இதற்கு முன் பெரிய பெரிய இயந்திரங்களால் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யலாம். சுலபமான முறையில் செய்யக்கூடிய கப் சாம்பிராணி இயந்திரம் இப்போது வந்துவிட்டது.
இந்த கப் சாம்பிராணியை வட மாநிலங்களில் வெவ்வேறு வண்ணங்களில் வாசனை திரவியங்களுடன் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கப் சாம்பிராணிகளை கருப்பு வண்ணங்களில் மட்டுமே விற்பனை செய்கிறார்கள். வட மாநிலத்தினை போலவே நாமும் பல வண்ணங்களை செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த தொழில் துவங்க என்னென்ன மூலப்பொருள், இயந்திரம் பற்றிய விவரங்களை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்
கப் சாம்பிராணி மூலப்பொருள்:
*கரித்துகள்கள்
*ஜிகட்
*மரத்தூள்
*சாம்பிராணி
*வாசனை திரவியம்
*கெமிக்கல்
இந்த தொழிலில் ஒரு பாக்கெட்டிற்கு 12 கப் சாம்பிராணி பீசஸ் வைக்கலாம். ஒரு பாக்கெட்டிற்கு இந்த சாம்பிராணி செய்ய மொத்த செலவுகள் ரூ. 10/- மட்டுமே ஆகும். இந்த மிசின் இந்தியாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கின்றது. சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் யோசிக்கலாமல் இந்த மிசின் வாங்கி தொழிலை துவங்கலாம்.
இயந்திரம் விலை:
இந்த கப் சாம்பிராணி மிசின் ஆரம்ப விலை ரூ. 20,000/- முதல் கிடைக்கின்றது.
அடுத்து அட்டை பெட்டி இதர செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூ. 30,000/- ஆகும். இந்த தொழில் துவங்க மொத்தமாக ரூ.50,000/- இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே தாராளமாக இந்த தொழிலை துவங்கலாம்.
இடப்பகுதி:
இந்த இயந்திரத்தை வைப்பதற்கு வீட்டின் சிறிய இடம் போதுமானது.
கப் சாம்பிராணி தொழில் செய்யும் முறை:
முதலில் மூலப்பொருள்கள் அனைத்தையும் காயவைத்து கொள்ளவும். அடுத்து கீழே தட்டில் அந்த கரித்துகள்களை வைத்துக்கொள்ளவும். துகள்களை அந்த ஓட்டையின் உள் செலுத்தி அந்த கை பிடியினை ஒரு முறை சுற்றி அழுத்திவிட வேண்டும். அழுத்தி விட்ட பிறகு அந்த மிஷினில் கப் சாம்பிராணியானது ரெடி ஆகிவிடும்.