- விடியற் காலையில் தீபம் ஏற்றுவது என்பது நமது முன்னோர்கள் தவறாமல் செய்துவந்த ஒரு விஷயம். அன்றைய காலக்கட்டத்தில் விவசாயத்திற்கும், மற்ற பலவேலைகளுக்கும் செல்லும் வழக்கம் குடும்பத் தலைவர்களுக்கு இருந்தது. செல்லும் காரியம் தடைபடாமல் நல்ல விதமாக முடிக்க காலையில் தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்கும் பழக்கம் இருந்துவந்தது.
- இரு உள்ளங்கைகளை சேர்த்து வான்நோக்கி காண்பித்து பின்னர் கூப்பிய படி கைகளை உயர்த்தி வணங்குவார்கள். உள்ளங்கைளுக்கு பிரபஞ்சத்தின் நல்ல வற்றைகிரகிக்கும் ஆற்றல் உண்டு.இதனால் உடலும், மனமும் தெளிவாகும். சூரிய வணக்கம் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
- சூரியன் உதயமாகும் நேரத்தில் விளக்கு ஏற்றினால் கடவுளின் அருள் பூரணமாகக் கிடைக்கும். உடலும், மன மும் ஆரோக்கியம் பெறும். அதே போல் சூரியன் மறையும் நேரத்திற்குச்சற்று முன்னர் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். மறையும் சூரியக் கதிர்கள் மூலம் சில தாவரங்கள் உயிர் பெறும். அதே நேரம் அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வருவார்கள். வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் இருக்கும்.
- சூரியபகவானின் உதயமும், அஸ் தமனமும் நம் பிரார்த்தனைகளைப் பரிபூரணமாக ஏற்கும் சக்தி கொண்டவை. காலையும், மாலையும் தீபம் ஏற்றுவதால் மனம் இறுக்கத்தில் இருந்து விடுபட்டு தெளிவு ஏற்படும். ஒரே ஒரு நிமிடம் விளக்கேற்றி வைத்து ஆண்டவ னைப் பிரார்த்தித்தால் நம் கவலைகள், கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.
- தினமும் அதிகாலையில் விளக்கு வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றோ, இரண்டு தினங்களோ கூட இதனைப் பின்பற்றலாம். செவ்வாய், வெள்ளி என இரு நாட்களில் ஏதேனும் ஒரு நாளைக் கூடத் தேர்வு செய்து கடைப்பிடிக்கலாம்.
- பொதுவாகவே விளக்கு ஒளிக்கு நேர்மறை எண்ணங்களை பரவச் செய்யும் குணங்கள் அதிகம். மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் மின்சார செயற்கை விளக்கு களை அணைத்துவிட்டு வெறும் விளக்கு வெளிச்சத்தில் வீட்டை நிறைக்கலாம்.
- ஒரு விளக்கு ஏற்றுவதைத் தவிர்க்கவும், இரட்டை தீபம் செல்வத்தைப் பெருகச் செய்யும். இல்லையே மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப் படையில் ஏற்றலாம். ஆனால் ஒரு தீபம் கூடாது.
- விளக்கு ஏற்ற நெய் அல்லது நல் லெண்ணெய், மற்றும் விளக்கெண்ணெய் மட்டுமே ஏற்றவும். விளம்பரங்களில் காட்டப்படும் ஐந்து எண்ணெய், மூலிகை எண்ணெய்களைத் தவிர்ப்பது நல்லது.
- தீபம் எனில் விளக்குதான் என்றில்லை. எந்த மதத்தினரும் அவரவர் பழக்கத்திற்கு ஏற்ப மெழுகுவர்த்தி, அல்லது மண் விளக்கு என எதுவும் ஏற்றலாம். பொதுவாகவே எரியும் தீபம் மனதை அமைதியாக்கி, சீரான எண்ணங்களைக் கொடுக்கும்.