Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 'டெய்லி பாஸ்'

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ‘டெய்லி பாஸ்’

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ‘டெய்லி பாஸ்’

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ‘டெய்லி பாஸ்’ என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘டெய்லி பாஸ்’ குறித்து பார்ப்போம்.

எந்த மெட்ரோ, எத்தனை முறை

சென்னை மெட்ரோ சேவையில் வெறும் ₹.100 ரூபாய் கட்டணத்தில்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயிலிலும் பயணிக்கலாம்.

நாள் முழுவதும்

இந்த சேவையில் ‘டெய்லி பாஸ்’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் ₹.150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த ‘டெய்லி பாஸ்’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் ₹.50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்.

யார் வேண்டுமானாலும்

மேலும் இந்த ‘டெய்லி பாஸ்’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்.

புதிய திட்டம்

இதுவே பேருந்து ‘டெய்லி பாஸ்’ -ஐ வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments