Saturday, December 2, 2023
Homeஉடல்நலம்குக்கரில் உணவை சாமைபதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!

குக்கரில் உணவை சாமைபதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்!

இன்றைய காலகட்டத்தில் சமைத்து சாப்பிட பலருக்கும் சோம்பேறித்தனம். இதனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி கடைகளில் வாங்கி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் தான் பாழாகும்.

இன்னும் சிலர் வேகமாக சமைத்து முடிக்க வேண்டும் என்பதற்காக பிரஷர் குக்கரில் சமைக்கிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் பிரஷர் குக்கரில் சமைப்பதும் ஆபத்தாக முடியும். குறிப்பாக சில உணவுப் பொருட்களை குக்கரில் சமைத்தால் விபத்துக்கள் ஏற்படும்.

அதோடு அதில் சமைக்கும் உணவில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும்.

இன்றைய அவசர உலகில் பிரஷர் குக்கர் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறது.

இருப்பினும், பல காரணங்களால் இந்த குக்கர் சில நேரங்களில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

rise

அரிசி

பிரஷர் குக்கரில் பொதுவாக பலரும் சாதத்தை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. மேலும் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிட்டால் உடல் பருமனாகும்.

எப்படியெனில் குக்கரில் சாதத்தை சமைக்கும் போது, அதில் உள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் உடல் எடை கூடுகிறது.

potato

உருளைக்கிழங்கு

நம்மில் பலர் உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் தான் வேக வைப்போம். ஏனெனில் உருளைக்கிழங்கை எளிதில் வேக வைப்பதற்கான எளிய வழி இது தான்.

இருப்பினும், உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். அதுவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.

Milk products

பால் பொருட்கள்

பால் பொருட்களை எப்போதும் பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குக்கரானது விரைவில் வேகாமல் இருக்கும் உணவுகளுக்காக தயாரிக்கப்பட்ட பாத்திரம்.

ஆனால் பால் குறைவான நேரத்தில் சூடாகக்கூடியது என்பதால் பாலால் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைக்காதீர்கள்.

EGG

முட்டை

சிலர் முட்டைகளை குக்கரில் வேக வைப்பார்கள். பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

fruits

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை விட சத்தானவை எதுவும் இருக்க முடியாது.

இப்படி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் குக்கரில் போட்டு வேக வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவற்றில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

Fish

மீன்

பொதுவாக மீன் வேகமாக வெந்துவிடும். அத்தகைய மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.

குறிப்பு

பிரஷர் குக்கரில் எப்போதும் சமைக்கும் போதும், குக்கரை மூடிய பின் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரஷர் குக்கரைத் திறப்பதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும்.

அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிய பின் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து பின் மூடியைத் திறக்கவும். மிகவும் பழமையான பிரஷர் குக்கர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments