அருள்நிதி நடித்து 2015 ஆண்டு வெளிவந்த “டி மான்ட்டி காலனி ” படம் நல்லதொரு வெற்றியை தேடி தந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி உள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி நடித்துள்ள இப்படம் முந்தின பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. டி மான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.முழுப்படமும் முடிந்துவிட்ட நிலையில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.