Friday, March 29, 2024
Homeஅரசியல்பரமக்குடி நகராட்சி சுகாதாரத் துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி நகராட்சி சுகாதாரத் துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி நகராட்சி சுகாதாரத் துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.

பரமக்குடி நகராட்சி சுகாதாரத் துறையின் அலட்சிய போக்கை கண்டித்து தாய்த் தமிழர் கட்சி சார்பில் பரமக்குடி நகர் செயலாளர் பூவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர இளைஞரணி தலைவர் அன்புராஜ், நகர இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், நகர மாணவரணி செயலாளர் பூபதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாய் தமிழர் கட்சியின் தலைவர் பி.ம.பாண்டியன், தமிழ்தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கண்டன உரையில் பேசியதாவது, ” பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பை, வைகை ஆற்றின் இருபுறமும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரமக்குடி நகராட்சி சுகாதார துறையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சரியான சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு வழங்கும் ஈ.பி.எப் பணத்தை முழுமையாக வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு சீருடை, அதேபோல் வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்.

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடி நகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும்.

ஐந்து முனை பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையை மேம்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் சுரங்கப்பாதை பகுதியில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என் பேசினார்.

 

இதையும் படியுங்கள் || ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்! பன்னீர் செல்வம் வாக்குமூலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments