பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் சென்ற காமக்கொடூர குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர், முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பசீர் அகமது,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் கலவரத்திற்கு காரணமானவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும்; பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி கும்பலை தூக்கிலிட வேண்டும் எனவும்; கலவரத்தை தடுக்க தவறிய மணிப்பூர் ஆட்சியை கலைக்க கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, மண்டல தலைவர் அரசு சோமன் கண்டன உரையாற்றினர்.
இதில், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகேசன்,
திருவாடனை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முகமது ஷாகீம்,
மாவட்ட துணைச் செயலாளர் சீனிப்பீர், தகவல் தொழில்நுட்ப அணி வசந்த், பரமக்குடி நகர் ஒருங்கிணைப்பாளர் ராஜா, நகர் செயலாளர் கணேசன், திராவிட முன்னேற்றக் கழக நகர் செயலாளர் சேது கருணாநிதி, சிபிஐ மாவட்ட செயலாளர் பெருமாள், தமிழ் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர்.
பசுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜா, மதிமுக நகர செயலாளர் பிச்சைமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, காங்கிரஸ் மகளிர் அணி தலைவி ராமலட்சுமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மண்டல தலைவர் மதுரை வீரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில இளைஞரணி செயலாளர் யோகநாதன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக, மணிப்பூர் கலவரத்தில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.