வேளாண்மை துறையை ஆய்வு மேற்கொண்ட துணை இயக்குனர்
முதுகுளத்தூர் துணை இயக்குநர் வேளாண்மை பாஸ்கரமணியன் விவசாயம் பற்றிய ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை பற்றிய ஆய்வு
முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள வளநாடு என்ற கிராமத்தில் உள்ள வேளாண்மை குறித்த உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை முதுகுளத்தூர் வேளாண்மை துணை இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.
மேலும், பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவை நெல் ரகம் விதைக்கப்பட்ட வயல்களையும் வயல்களில் துவரை விதைகள் விதைக்கப்படுவதையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்
வட வளநாடு கிராமத்தில் வேளாண் குறித்த ஆய்வினை மேற்கொண்டார் துணை இயக்குநர் வேளாண்மை பாஸ்கரமணியன்.இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், துணை வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவிவேளாண்மை அலுவலர் முத்துராஜ் மற்றும் ஆட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் ஆய்வில்