தேவர் ஜெயந்தி பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்துக்கு அக்., 30ல் வரும் பிரதமர் மோடி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடை பெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
குரு பூஜை அக்., 30ல் பசும்பொன்னில் நடக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்காக அக்., 30ல் தமிழகம் வருகிறார். அன்று பசும்பொன் சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளது.