இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் மாவட்ட வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் முக்கிய இடங்களை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்
இராமேஸ்வர பகுதியை மேம்படுத்தும் வகையில்
இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டட கட்டுமான பணியினை பார்வையிட்டு பணிகளை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு இக்குழு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்று பொதுமக்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தவுடன், அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான சாலை வசதிகளை அமைத்திடவும், குடிநீர் பயன்பாட்டிற்கு இருந்து வரும் திறந்த வெளி கிணறை சீரமைத்திடவும் மற்றும் மகளிர் குழுக்களில் உள்ள விடுபட்ட மகளிர் குழுக்களுக்கு மகளிர் திட்டத்துறையின் மூலம் உரிய கடனுதவிகள் வழங்கிடவும், அதேபோல் பதிவு இல்லாத நபர்களுக்கு உரிய பதிவு செய்து அட்டை வழங்கிடவும், இங்கு படித்து வரும் பிள்ளைகளுக்கு தேவையான ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கான தனித்துணை ஆட்சியருக்கு இக்குழு பரிந்துரை செய்வதுடன், தற்பொழுது புதிதாக இலங்கையில் இருந்து வந்து வசித்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித் தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் இக்குழு பரிந்துரை செய்யும் என தெரிவித்தார்.
புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம்
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கி வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தவுடன், புதிதாக 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன், பொதுமக்களின் முக்கிய தேவைகளின் ஒன்றான மருத்துவ சேவையை சிறந்த முறையில் செயல்படுத்திட வேண்டுமென மருத்துவரிடம் அறிவுறுத்தினார். பின்னர் இராமநாதபுரத்தில் தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் அரசினர் பள்ளி மாணவியர் விடுதிக்கு சென்று பார்வையிட்டு விடுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டதுடன், மாணவிகளுக்கு அரசு வழிகாட்டுதலின்படி உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன், உணவுப் பொருள்களின் தரம் குறித்து பார்வையிட்டு விடுதியில் மாணவிகளுக்கு நல்ல முறையில் உணவுகளை வழங்கி பாதுகாத்திட வேண்டுமென காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிக்குழு செயலாளர் முனைவர் சீனிவாசன் , மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , மீன்வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.