கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். திருடா திருடி, காதல் கொண்டேன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களால் புகழ் ஏணியின் உச்சியை தொட்டார் இவர்.
அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை மணம் முடிக்கும் யோகம் இவருக்கு வந்தது. எல்லாருமே அந்த நேரத்தில் ரஜினி பெண்ணை தனுஷ் மணம் முடிக்கிறாரா என ஆச்சரியப்பட்டனர் என்பது உண்மை.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணம் முடித்த பிறகு தனுஷின் கிரேடு மேலும் உயர்ந்தது. மிகப்பெரிய முன்னணி நடிகர் ஆனார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தனுஷ் தன் மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் சிலர் தனுஷை வசைபாடி வருகின்றனர். எங்கள் தலைவர் இல்லை என்றால் நீங்கள் எப்படி தனுஷ் இவ்வளவு தூரம் முன்னேறி வந்து இருப்பீர்கள் என டுவிட்டரில் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.