`வாத்தி’ டு `நானே வருவேன்’ – தனுஷின் ஷூட்டிங் பிளான்.
ஹைதராபாத்தில் நடக்கும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நடக்க உள்ளதாக சொல்கிறார்கள். தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது கட்டமாக ஊட்டியில் வேகமாக நடந்து வருகிறது.
காமினேஷன் காட்சிகள்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் யோகிபாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் தனுஷின் காமினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பணிகள் வேகம்
இப்போது தனுஷ், ‘வாத்தி’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களும் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டப்பிங் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டே, ஊட்டிக்குப் பறந்திருக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
படம் ரெடி
இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடந்து முடிந்து விட்ட நிலையில், அதன் இயக்குநர் மித்ரன் ஜவஹர், பேட்ச் ஒர்க்குகளை முடித்து படத்தை ரெடியாக வைத்திருக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால், ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸிற்குப் பின் அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
போஸ்ட் புரொடக்ஷன்
இப்போது தனுஷ், ‘வாத்தி’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களும் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டப்பிங் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டே, ஊட்டிக்குப் பறந்திருக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடந்து முடிந்துவிட்ட நிலையில், அதன் இயக்குநர் மித்ரன் ஜவஹர், பேட்ச் ஒர்க்குகளை முடித்து படத்தை ரெடியாக வைத்திருக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால், ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸிற்குப் பின் அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
இதையும் படியுங்கள் || சுங்கக் கட்டணம் கட்ட தேவையில்லை