விலைமதிப்பற்ற உலோகங்கள் பல இருந்தாலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். அதற்கு அதன் மதிப்பு மட்டும் காரணமல்ல; தங்கத்தை வைத்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் ஒரு காரணம்.
முதலில் தங்கத்தை நகையாக, நாணயங்களாக சேமித்து வந்தனர். பின்னர் தங்க முதலீட்டுப் பத்திரம் போன்ற பல வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது தங்கம் மீதான முதலீட்டில் ஆர்வம் குறைந்து வருகிறதுஎன தகவல் வெளியாகியுள்ளது
2021ஆம் நிதியாண்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விற்பனயில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் இப்போது நிதி சார்ந்த முதலீட்டில் ஆர்வம் காட்டி வருவதாகவும் SBI அறிக்கை ஒன்று கூறுகிறது. மக்களின் சேமிப்பு பழக்கத்தில் மாற்றம் காணப்படுகிறது என அறிக்கை கூறுகிறது.
தங்கத்தின் மீதான முதலீட்டில் மாற்றம்
NSO மற்றும் SBI வெளியிட்டுள்ள ஆராய்ச்சி தரவுகள், 2020-21 ஆம் ஆண்டில், கொரோனா தொற்று (Corona Virus) காலத்தின் போது, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வடிவில் வாங்குவது ரூ.38,444 கோடியாகக் குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. 2019-20 விற்பனை ரூ.43,136 கோடியாக இருந்தது. 2017-18ல் ரூ.46,665 கோடியாக இருந்த தங்க நகை விற்பனை 2018-19ல் ரூ.42,673 கோடியாக குறைந்துள்ளது.
தொற்றுநோய் காலங்களில் வீட்டு செலவுகளுக்கான கடன் அதிகரிப்பதை NSO தரவு காட்டுகிறது. 21ஆம் நிதியாண்டில் மொத்த நிதி சேமிப்பு ரூ.7.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. இதனுடன், மொத்த கடன்களும் ரூ.18,669 கோடி அதிகரித்துள்ளது.
செலவு செய்யும் விதத்தில் மாற்றம்
கொரோனா தொற்றுநோய்களின் போது செலவு செய்யும் விதத்தில் மாற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. PFCE தரவுகளை ஆராய்ந்ததில், மக்கள் பயன்படுத்தும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
21 நிதியாண்டில் உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விற்பனை ரூ.3.5 லட்சம் கோடியாக அதிகரித்தாலும், போக்குவரத்து, உடை, காலணி மற்றும் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான செலவு ரூ.6.1 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.
திங்களன்று வெளியிடப்பட்ட 2022 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியர்கள் மூலதன சந்தையில் அதிக பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும், பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையில், தனிப்பட்ட முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டி அளவு ஏப்ரல்-அக்டோபர் 2021 ஆண்டில் 39 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
ALSO READ: பொருளாதார ஆய்வறிக்கையில் ஜி.டி.பி. 8-8.5 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று தகவல்