வறுத்த உணவுகள்
- சிப்ஸ், வறுத்த மீன், சிக்கன், முந்திரி போன்ற அத்தனைக்கும் கொஞ்சம்கூட இடம் தரக்கூடாது.
- அவற்றை அனுமதித்தால், உங்கள் சரும அழகுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
சோடா
- சோடா கலந்த பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- கொழுப்பு நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்டட் இறைச்சி , தோலுரிக்கப்படாத கோழி ஆகியவற்றுக்குப் பெரிய முழுக்கு போடுங்கள்
வெஜிடபிள் ஆயில்
- வெஜிடபிள் ஆயில் ஆக்சிடைஷ் செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஆலிவ் ஆயில் இதயத்துக்கும் நல்லது. உங்கள் சருமத்தையும் பொலிவாக்கும்.
சுத்திகரிக்கப்படாத தண்ணீர்
- நம்முடைய எல்லா உணவுகளையும் விட சுத்தமான தண்ணீர் மிக அவசியம்.
- பெரும்பாலான நோய்கள் சுத்தமில்லாத தண்ணீரால் தான் உண்டாகின்றன.
- நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது.
உப்பு
- கடலில் இருந்து நேரடியாகப் பெறப்படும் உப்பில் தான் எல்லா வகையான மினரல்களும் இருக்கின்றன.
- அதை மட்டும் அளவாகப் பயன்படுத்துங்கள்.
- அயோடைஸ்டு என்று கூறப்படுகிற, சுத்திகரிக்கப்பட்ட உப்பைத் தவிர்த்திடுங்கள்.
சர்க்கரை
- முதலில் நீங்கள் தவிர்க வேண்டியது சர்க்கரையைத் தான்.
- முடிந்தவரை 20 கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்கும்படியான உணவுகள்எடுத்துக் கொள்ளுங்கள்.
- அது சருமத்தை பளபளப்பாக்குவதோடு நீரிழிவு மற்றும் உடல்பருமனையும் கட்டுபடுத்தும்.