சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் நடைபெற்றது. திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் ஆடித்திருவிழா கொண்டாடப்படும். நடப்பாண்டு திருவிழா ஜூலை 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன்பின் தினமும் சௌந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனம், சேஷ வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் அமர்ந்து தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜூலை 19 அன்று திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர்.
நான்கு ரத வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்றது. முன்னதாக கோவில் வளாகம் முன்பு பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடினர். 23ம் தேதி தெப்ப உற்சவத்துடன் ஆடிப்பெருக்கு விழா நிறைவு பெறுகிறது.