Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்போகலூர் ஊராட்சி பள்ளியை பரமக்குடி வருவாய் அப்தாப் ரசூல் துவக்கி வைத்தார்

போகலூர் ஊராட்சி பள்ளியை பரமக்குடி வருவாய் அப்தாப் ரசூல் துவக்கி வைத்தார்

போகலூர் ஊராட்சி பள்ளியை பரமக்குடி வருவாய் அப்தாப் ரசூல் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் மூலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல்,  தலைமையேற்று உண்டு உறைவிடப் பள்ளிக்கான புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தர்

சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா பள்ளி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011ன் படி பள்ளி வசதி அளிக்கும் பொருட்டு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள், நகர்ப்புற குழந்தைகள், தெருவோர குழந்தைகள், வீடுள்ள குழந்தைகள், மற்றும் பெரியோர் துணை இல்லாத குழந்தைகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதன் நோக்கம் குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் பெற்றோர்களுடன் வியாபாரம் ரீதியாக வெளியில் செல்லும் நிலையில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதிகளுடன் பள்ளி படிப்பை தொடர்வதற்கான திட்டமாகத்தான் உண்டு உறைவிட பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது

அதன் அடிப்படையில் சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் பெற்றோரின் குழந்தைகளுக்காக புதிய உண்டு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயில்வதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டு பள்ளியில் உள்ளன.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்/ வார்டன், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 14 நபர்கள் பணி மேற்கொள்வார்கள்

இந்த உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் தலா 1 மாணவருக்கு ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் விதம் 12 மாதங்களுக்கு ரூ.2400 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது

மேலும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் மூன்று வேளை உணவு மற்றும் பாட புத்தகங்கள், சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாக கல்வி கற்க உறுதுணையாக இருந்து தாங்கள் வர்த்தக ரீதியாக வெளியில் சென்றாலும் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திட வேண்டும்.

அரசின் நோக்கம் அனைத்து குழந்தைகளும் உயர் கல்வி வரை படித்து பயன்பெற வேண்டும் என்பதே ஆகும்.

அதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதுடன் பிள்ளைகளும் ஆர்வமுடன் படித்து பயன்பெற்றிட வேண்டுமென பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல்,  தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்களை பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் வழங்கினார்.

தலைவர்கள் மட்டும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரவி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன், போகலூர் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலையரசி (போகலூர்), சாத்தாயி (தீயனூர்),சாந்தாய் சின்னப்பன் (செவ்வூர்), உதவி திட்ட அலுவலர் கர்ணன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் நீலாமுருகேஸ்வரி, திலகர்ராஜன், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments