கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்ப வினியோகத்தை எம்.எல்.ஏ.முருகேசன் தொடங்கி வைத்தார். பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அண்ணா நகரில் உள்ள நியாய விலை கடையில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியை எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பரமக்குடி நகர மன்ற தலைவர் சேதுகருணாநிதி, கவுன்சிலர் ஜெயபாரதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பங்களை விரைந்து தருமாறு பொதுமக்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்தினர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்களை பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.