பரமக்குடி நகராட்சியில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொருள்களின் பதிவேடுகளை ஆய்வு
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள கோவிந்த வல்லவன் தெருவில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று உணவுப் பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ததுடன் பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஆய்வின் போது உணவு பொருள்களின் இருப்பில் அரிசி 15 கிலோ, சர்க்கரை 2 கிலோ குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதுடன் குறைபாட்டிற்கான காரணத்தை விற்பனையாளர்களிடம் கேட்டறிந்ததுடன் அப்பொழுதே பொருள்களின் குறைபாட்டிற்கான கட்டணத் தொகையாக ரூ.475/-யை விற்பனையாளருக்கு அபராத தொகையாக கட்ட உத்தரவிட்டதுடன் வரும் காலங்களில் பொருள்களின் இருப்பு சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதுடன் மற்ற நியாய விலை கடைகளில் ஆய்வின் போது பொருள்களின் இருப்பு குறைபாடுகள் கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நியாய விலை கடைகளை மேலும் ஆய்வு பணி
மேலும் மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அவ்வப்போது நியாய விலை கடைகளுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்,பரமக்குடி வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்