“சிறந்த நடைமுறைகள் விருது” -2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் பொது சேவை மேம்பாடு அல்லது துறை சார்ந்த முன் முயற்சிகள் அல்லது வரி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்றவற்றில் சிறப்பு வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருவினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தைப்பயன்படுத்தி விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அதன் நகலை 19.07.2023-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், இராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.