இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்கு ஏதுவாக வங்கிகள் மூலம் கல்வி கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மையம் துவங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பரமக்குடி அரசு கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப்படிப்புகள் வகுப்புகள் 2023-2024-ம் நிதியாண்டிலிருந்து புதிதாக துவங்கப்படவுள்ளது.
பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பயில விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்துள்ள 18 முதல் 21 வயதுக்குள் (வயது வரம்பு தளர்வு 5 வருடம்) உள்ள செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 03.10.2023 அன்று பிற்பகல் 04.00 மணிக்குள் அரசு கலைக்கல்லூரி, பரமக்குடியில் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.