2023-2024ஆம் நிதியாண்டில் மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக்கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ஒரு குழுவிற்கு ரூ.1இலட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் மேம்படுத்தப்படும்
இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படுவதும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பினை மண்வளம். நீர்வளம் ஏற்படுத்துவதும் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலப்படுத்தி ஊக்கப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையங்கள் நிறுவுவதற்கு அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர் குழுக்கள் அல்லது அங்கக வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான தேர்வு குழுவின் ஒப்புதலை பெறுதல் வேண்டும்.
உழவர்களுக்கு பயிற்சி
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூலப்பொருட்களை வாங்குவதற்காக ஒரு குழுவிற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் உற்பத்தி செய்தல் சேமித்தல் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து உழவர் பயிற்சி நிலையம் / வேளாண் அறிவியல் பயிற்சி மையம்/ இயற்கை இடுபொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் விவசாயிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு வரைவு திட்டங்களின்படி தேவைக்கேற்ப கூடுதல் செலவினம் மேற்கொண்ட தொகையினை கூட்டுறவு வங்கி / வணிக வங்கிகள் மூலம் கடன் இணைப்பு பெற்று தர ஆவண செய்யப்படும்.
பயன்பெறும் வகையில் அமைந்த திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய தேவையான அனுமதி வழங்கப்படும். திட்டத்தில் பயன்பெற விரும்பும் உழவர் குழுக்கள் உழவன் செயலியில் பதிவு செய்தல் வேண்டும்.
இது குறித்த விரிவான தகவல்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.