இராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், விளைநிலங்களை பார்வையிட்டர்
பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்திவேண்டுகோள்
இந்த ஆய்வின்போது கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி விவசாயப்பணிகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கலைஞரின் வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பயன்படுத்திடும் வகையில் இத்திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.திட்டம் கடந்த ஆண்டு 169 ஊராட்சிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் அமைத்து திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 261 ஊராட்சிகளில் 284 விவசாயிகள் கொண்ட கிளஸ்டர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளிலும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன்பாடுகள்
இத்திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கு சொந்தமான இடங்களில் பயன்பாடற்ற விளைநிலங்களை கண்டறிந்து அவர்களுக்கு பயன்பெற்றிடும் வகையில் அந்த நிலங்களை சீரமைத்து பண்ணையை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளவும் அதற்குத் தேவையான இடுப்பொருட்களை கூட்டுறவுத்துறை வழங்கிடும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி பொருளாதார முன்னேற்றம் பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இத்திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தங்கள் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்