இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மற்றும் மாவட்ட திட்டக்குழுத் தலைவர் உதிசைவீரன், மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட திட்டக்குழு துணைத்தலைவர் விஷ்ணு சந்திரன், ஆகியோர் தலைமையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கை
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட திட்டக்குழு துணைத்தலைவர் விஷ்ணு சந்திரன், ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணிபுரிந்தால் அந்த மாவட்டமானது வளர்ச்சி பெறும். அவ்வாறு செயல்படுவதற்கு திட்டக்குழு அவசியமான ஒன்றாகும். நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் மட்டுமே பற்றாக்குறையாக இருந்து வருகிறது. அந்த பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தண்ணீர் சீராக கிடைத்திடும் பட்சத்தில் விவசாயம் மேம்படும், சட்டம் ஒழுங்கு சீராக அமையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி குடிநீர் சீராக கிடைத்திடும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீரானது கரூரிலிருந்து கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீரை எவ்வாறு வீணாகாமல் உபயோகிப்பது என திட்டக்குழு உறுப்பினர்கள் திட்டங்கள் வகுக்க வேண்டும். அவ்வாறு திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது ஏற்படாது. குடிநீர் வீணாக்காமல் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள், குளங்கள் அனைத்தையும் தண்ணீரை சேமிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அதனைத்தொடர்ந்து, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட திட்டக்குழு துணைத்தலைவர் விஷ்ணு சந்திரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , மாவட்ட ஊராட்சி குழுத்துணைத் தலைவர் வேலுச்சாமி , திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அபிதா ஹனிப் , மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கதிரவன் , கோவிந்தம்மாள் , வாசுதேவன் அவர்கள்,சசிகுமார் , கார்த்திகேஸ்வரி ,ஆதித்தன் கவிதா கதிரேசன் , ரவிச்சந்திரன் ராமவல்லி , முகமது காஜா சுஜபு , ஜீவரத்தினம் , காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.