ராமநாதபுரம் மாவட்ட யூனியன் டிரைவர்கள் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் டிரைவர்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11 யூனியன்கள், 7 பேரூராட்சிகள் உள்ளது. இந்த 11 யூனியன்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி), ஒன்றிய பெருந்தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சிகள் செயல் அலுவலர்கள் உட்பட்ட பல்வேறு பதவிகளுக்கு யூனியன் மூலம் வழங்கப்பட்டுள்ள கார்களுக்கு டிரைவர்கள் நியமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகின்றனர்.
அன்று முதல் இன்று வரை
யூனியன்களில் பணிக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரே இடத்தில் டிரைவராக பணிபுரிவதால் தனக்கு சாதகமாக பல்வேறு செயல்களை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒப்பந்த முறைகேடு
யூனியன்களில் டிரைவராக பணிபுரியும் ஒரு சில ஓட்டுநர்கள் பினாமி பெயரில் (உறவினர்) ஒப்பந்ததாரராக பதிவு செய்து ஒப்பந்தப் பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். யூனியனில் வேலைபார்க்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு டிரைவர்களாக பணிபுரிவதால் இவர்கள் எடுத்து செய்யும் ஒப்பந்த பணிகளில் முறையாக ஒப்பந்த பணிகளை செய்வது இல்லை. அது மட்டுமின்றி இவர்கள் செய்யும் ஒப்பந்த பணிகளை பெயரளவுக்கு மட்டுமே செய்துவிட்டு பில் வாங்குவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடவடிக்கை
எனவே உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சம்பந்தப்பட்ட யூனியன் டிரைவர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் பிரியாணி