பரமக்குடியில் தி.மு.க.வினர் இந்தி திணிப்பை எதிர்த்து நோட்டீஸ் விநியோகம்.
பரமக்குடி நகர் மற்றும் பொட்டிதட்டி பகுதிகளில் தி.மு.க.வினர் இந்தி திணிப்பை எதிர்த்து நோட்டீஸ் விநியோகம்.
பரமக்குடி நகர்
பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பரமக்குடி நகர் பகுதியில் நகர் செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்புக்கு எதிராக தி.மு.க அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக
மேலும்,சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.,வினர் கொடியினை ஏந்தி, தமிழகத்தில் வலு கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில்,மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த், கவுன்சிலர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
போகலூர் மேற்கு ஒன்றியம்போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில், அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில், இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
நோட்டீஸ் விநியோகம்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன்,பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டு நோட்டீஸ் வழங்கினார். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு நோட்டீஸ் விநியோகம் செய்தார்.