திருச்சி: ”திமுக.,விற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர்; லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை” என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கூட்டணி கட்சிகள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. அதன் வெளிப்பாடாக உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்கள் திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக திமுகவின் செயல்பாடுகளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மறைமுகமாக விமர்சித்து வருகின்றன. இதனால் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டாலும் திமுக தலைமை அதை சமாளித்தது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: லோக்சபா தேர்தல் போல், சட்டசபை தேர்தல் கூட்டணி சுமுகமாக அமையும் சூழ்நிலை இல்லை. திமுகவுக்கு தற்போது பல எதிரிகள் உள்ளனர். ஒருபுறம் சீமான் புகார்; புதிதாக தொடங்கப்பட்ட கட்சி எங்களுக்கு எதிராக உள்ளது. நாம் எத்தனை நல்ல காரியங்களைச் செய்தாலும் நம்மைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல், லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளுடன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியும், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடினமாக இருக்கும் என்பதை நேருவின் பேச்சு ஒப்புக்கொள்வதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு எதிராக நிற்கிறது.