சென்னை : கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்பதை வெளிப்படுத்த, மாவட்ட வாரியாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனை அதிமுகவுக்கு அழைத்த விவகாரம் திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் திருமாவளவனை அழைத்து இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தை அறிவித்தார்.
இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கல்வி நிறுவனத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, கூட்டணி கட்சி தலைவர்கள் 20 பேரும் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், வரும் 28ல் காஞ்சிபுரத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பவள விழாவையொட்டி, வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். செயல்தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.