இடுப்பு வலியா கவலை வேண்டாம்
- உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம். நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.
பயிற்சிகள்
- தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். நீந்துவது, நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளை தினந்தோறும் செய்து வந்தால் இடுப்பு வலி ஏற்படாது. இடுப்பு வலியை தடுப்பதற்கு வயிறு, தசை, முதுகுப்புறத் தசை வலுவாக வைத்திருக்க வேண்டும்.
முழங்கால் பயிற்சி
- படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம்.
தாங்க முடியாத வலி
- இடுப்பு வலி வந்தாலே பயங்கர கடு கடுப்பாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அது ஒரு பெரிய அவதி. ஆண்களைவிட பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் ஏற்படும் குறுக்கு வலியானது தாங்க முடியாத அளவிற்கு வந்து பாடாய் படுத்தும். அந்தளவிற்கு மிக கடுமையான இடுப்பு வலிக்கு நம் இயற்கை நமக்கு மருந்து கொடுத்திருக்கிறது. நிவாரணம் நிச்சயம் உண்டு.
கொள்ளு
- கொள்ளுப் பருப்பு இடுப்பு வலியை குணமாக்குவதில் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி நாளடைவில் நீங்கும்.
சுக்கு, மிளகு, கிராம்பு
- ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் அம்மியில் நசுக்கி தூள் ஆக்கி, அதை டீத் தூள் போல பயன்படுத்தி தேனீர் செய்து தினம் இரண்டு வேளை பருகி வர இடுப்பு வலி நீங்கும்.
வெற்றிலை
- வெற்றிலையை நன்கு நசுக்கி, கசக்கிப் பிழிந்து எடுத்து, அதன் சாற்றினை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் இதமாக தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.
நல்லெண்ணெய்
- நல்லெண்ணையுடன் நான்கு பூண்டு பற்கள் மற்றும் தளுதாளி இலை சேர்த்து நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும். வாரம் ஒரு முறை இப்படி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.