கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் “மருத்துவர் கைது”
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் பாரதிநகரில் குழந்தைகள் நலம் மற்றும் சர்க்கரை நோய்க்கான தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சை பெற வந்தார்.
அவரை, ஸ்கேன் எடுக்க மருத்துவர் பரிந்துரை செய்தார். பின்னர், ஸ்கேன் எடுத்துவிட்டு வந்த மாணவியை மருத்துவர் ஜபருல்லா (70) பரிசோதித்தார்.
அப்போது மருத்துவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி மருத்துவர் ஜபருல்லாவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்