Wednesday, April 17, 2024
Homeஉடல்நலம் அறிவோம்நாட்டுக் கோழி VS பிராய்லர் கோழி, எதை சாப்பிடலாம்!

நாட்டுக் கோழி VS பிராய்லர் கோழி, எதை சாப்பிடலாம்!

 1. கோழி இறைச்சியின் சுவை காரணமாகவும் மற்றும் அனைவரும் வாங்க கூடிய விலையில் இருப்பதால் அனைவரது வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை உணவு பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.
 2. கோழி இறைச்சி சாப்பிடுபவர்களில் இரண்டு விதம் இருக்கிறார்கள் ஒன்று நாட்டுக்கோழி சாப்பிடுவர் மற்றொருவர் பாய்லர் கோழி சாப்பிடுவார்கள்.
 3. நாட்டுக் கோழி இயற்கையான தானியங்கள் சாப்பிட்டு மற்றும் குப்பை மேடுகளில் இருக்கும் பூச்சிகளை உண்டு வீட்டுப் பராமரிப்பில் வளர்கின்றன.
 4. என்னதான் பாய்லர் கோழி உடலுக்கு ஆபத்து என்று ஒருபுறம் சொன்னாலும் கூட அதன் மேல் உள்ள மோகம் தற்போது வரை குறையவில்லை.
 5. கோழி இறைச்சியில் புரதச்சத்தும் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி இருந்தாலும் கூட அதே சமயம் உடலுக்கு கெடுதலை தரும் என்பதையும் மறுக்க முடியாது.
 6. சைவம் சாப்பிடுவார் கூட தற்பொழுது அசைவமாக மாறிக்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் அசைவம் சாப்பிடும் போகிறவர்கள் முதலில் சுவைப்பது சிக்கனை தான்.
 7. பிராய்லர் கோழிகளை தொடர்ந்து சாப்பிடலாமா என்னும் கேள்வி பலருக்கும் உண்டு. புரதம் நிறைந்தது கோழி இறைச்சி என்பதை மறுக்க முடியாது.
 8. அதே நேரம் அதை வளர்க்கும் முறையிலும் பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும். இல்லயெனில் அவை உடலுக்கு நன்மை செய்வதில் குறைகள் உண்டாகலாம்.

நாட்டுக் கோழி 

 1. நாட்டுக்கோழியும் பிராய்லர் கோழியும் நாட்டுக்கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது.
 2. இதில் புரதசத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்புசக்தியையும் தருகிறது. நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.
 3. நாட்டுக்கோழி அளவுக்கு பெருத்த நன்மைகளை பிராய்லர் கோழியிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் அதன் வளர்ப்பிலும் குறை நேராமல் இருக்க வேண்டும்.
 4. பிராய்லர் கோழி உரிய காலத்தில் உரிய இடைவேளை வரையான வளர்ச்சியை அதற்கு தகுந்த ஆகாரத்தின் மூலமே பெற வேண்டும்.
 5. அதோடு பிராய்லர் கோழிக்கு தீவனம் இடுவதிலும் இந்திய உணவு தர நிர்ணயம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மட்டுமே ஆன் டி பயாடிக் சேர்க்கை இருக்க வேண்டும். இப்படி வளர்ந்து விற்பனைக்கு வரும் கோழி இறைச்சியில் கேடு இருக்காது.
 6. பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான்.
 7. குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பிராய்லர் கோழிகள்

 1. பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 2. மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.
 3. அளவை மிஞ்சும் ஆன்டிபயாடிக் எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும்
 4. கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள் (அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள்) அதிகரித்து, கோழிகளிடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது.
 5. இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.

மருந்தாகும் நாட்டுக் கோழி

 1. உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது.
 2. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம்.
 3. நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
 4. தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன.
 5.  சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து.
 6. அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments