குடும்ப வன்முறை குற்றவியல் சாராத நிவாரணங்கள்
இச்சட்டப்படி,குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்பூர்வமான மனைவி அல்லது திருமணமாகாத பாலியல் துணைவி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதப்படுவார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஆணின் மகள், தாயார், சகோதரி, குழந்தை, விதவை உறவினர் ஆகியோரும் இச்சட்டத்தின்vகீழ் பாதுகாப்பு பெறுவர்.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமிழைத்தார். என்று நீதிமன்றம் கருத, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஒன்றே போதுமானது. இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் நீதிமன்ற விசாரணைக்குட்பட்டவை மற்றும் பிணையில் விடுவிக்க முடியாதவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, கீழ்கண்டவாறு நிவாரணங்கள் கிடைக்கும்.
- பாதிக்கப்பட்ட பெண், கணவனின் வீட்டிலேயே தங்கலாம். அவரை வெளியேற்ற முடியாது.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி சொத்தில் பங்கு இல்லாவிட்டாலும், சொத்தின் ஒரு பகுதியை அவருக்கு வழங்குமாறு நீதிமன்றம் ஆணையிடலாம்.
- குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணை நிராகரிக்கவோ, தொந்தரவுகள் செய்யவோ, அவர் வேலை பார்க்குமிடத்தில் நுழையவோ முடியாது.
- குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணுடன் நேரில் அல்லது தொலைபேசி. கடிதம் மற்றும் மிண்ணணு முறைகளில் தொடர்புகொள்வது தடை செய்யப்படும்
- குடும்ப வன்முறை காரணமாக ஏற்படும் இழப்புகளுக்காகவும் செலவுக்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணிற்கு மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்.
- மனரீதியான பாதிப்புகளுக்காகவும் இழப்பீடுகள் வழங்கப்படும்
- வருடம் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 20000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
- அந்தந்த மாவட்டத்திலுள்ள குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.