கமுதி பசும்பொன்னில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம்
கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
அன்னதானம்
அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி. விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி.எம்.டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்க தலைவர் தொழிலதிபர் குணாதேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாரத ரத்னா விருது
இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
தீர்மானம்
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர். இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.