Sunday, May 28, 2023
Homeஆன்மிகம்விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது! என்ன

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது.

2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது.

3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது.

4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது.

 

5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்.

6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது.

7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்.

8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்.

9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது.

10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது.

11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது

12.விபூதியை கீழே சிந்தக்கூடாது

13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது

14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது

15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது

16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments