சிவகங்கையில் விதை பண்ணை உற்பத்திபயிற்சிபெற்ற விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விதைப் பண்ணை உற்பத்தி பயிற்சிபெற்ற இளம் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்காமல் இழுத்தடிப்ப தாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு கிராமப்புற இளைஞர் களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில், வேளாண் மைத்துறை சார்பில் சிவகங்கையில்’ விதைப் பண்ணை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர், இளையான்குடி, திருப்புவனம், சிவகங்கை,காளை யார்கோவில், மானாமதுரை ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த இளம் விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மார்ச் 28-ம் தேதியில் இருந்து மே 11-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது தினமும் ரூ.400 கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கிய நிலையில், 5 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து காவிரி வைகை கிருதுமால்-குண்டாறு பாசன விவ சாயிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் இராம.முருகன் கூறியதாவது: நிதி ஒதுக் கிய பிறகுதான் பயிற்சி நடத்தப் படுகிறது. ஆனால் பணம் வர வில்லை என்று கூறி ஊக்கத் தொகை வழங்க மறுக்கின்றனர். இதனால் பயிற்சி பெற்றவர்கள் ஊக்கத் தொகை பெறுவதற்காக, தினமும் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். உடன டியாக ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்றார்.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் (பொ) தனபால் கூறுகையில், ‘நிதி ஒதுக்கீடு வர வில்லை. வந்ததும் பணம் வழங் கப்படும்,’ என்றார்.