டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வழங்க லஞ்சம்
கொந்தளிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வழங்க அதிகாரிகள் நேரடியாக சதுர அடிக்கு ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை பைலுக்கு தகுந்தார் போல் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வழங்குவதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் நம்மிடம் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தீவிர விசாரணை
தகவலின் அடிப்படையில் நாம் விசாரணை செய்தபோது
ராமநாதபுரத்தில் உள்ள டி.டி.சி.பி(DTCP) அலுவலகத்தில் தான் நிலத்திற்கு லே-அவுட் போட்டு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், கட்டிடங்கள் புதிதாக கட்ட ப்ளான் அப்ரூவல் வாங்க வேண்டும்.
காத்திருப்பு
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாதத்திற்கு சுமார் 200 பேர் வரை டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வாங்க ஆன்லைன் மூலம் பதிவு செய்து பல மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.
30 அதிகாரிகளுக்கு லஞ்சம்
இந்த டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வாங்க வேளாண்மை துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி தடையில்லாச் சான்று பெற வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் டி.டி.சி.பிக்கு(DTCP) பதிவு செய்ய வேண்டும்.
5 கோடி முதல் 10 கோடி வரை லஞ்சம்
முறையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆவணங்கள் சரியாக இருந்தால் சதுர அடிக்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை கப்பம் கட்டவேண்டும். ஆவணங்கள் சரியாக இல்லாத ஃபைல்களை கொடுத்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வழங்க அதிகாரிகள் சதுர அடிக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அலுவலகத்திலேயே நேரடியாக லஞ்சம் பெற்று அப்ரூவல் வழங்கி வருகின்றனர்.
இதனால் மாதத்திற்கு ஆயிரம் கோடி வரை டி.டி.சி.பி அப்ரூவல் வழங்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொள்ளையடித்து வருகின்றனர். இதே நிலைமை தான் தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் இருந்து வருகிறது.
சவால் விடும் அதிகாரிகள்
லஞ்சம் வாங்குவது குறித்து கேட்டபோது சதுர அடிக்கு ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை பைலுக்கு தகுந்தார்போல் லஞ்சம் வாங்குவது உண்மைதான். ஆனால் நாங்கள் வாங்கிய லஞ்ச பணத்தை நாங்கள் மட்டுமே வைத்து கொள்வதில்லை. எங்கள் உயர் அதிகாரிகளுக்கும் நாங்கள் வாங்கிய லஞ்ச பணத்தில் கப்பம் கட்டி வருகிறோம்.
காக்கும் அதிகாரிகள்
கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் புரளும் டி.டி.சி.பி(DTCP) அப்ரூவல் வழங்கும் அதிகாரிகள் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் வாங்கும் லஞ்ச பணத்தின் மூலம் பண்ணைவீடு, தோப்பு, மால்கள் போன்றவற்றில் முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வருகின்றனர்.
எனவே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் “லஞ்ச ஒழிப்புத் துறைக்கு” கோரிக்கை விடுக்கின்றனர்.