காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
தமிழகத்தின் அனைத்து கடலோரப் பகுதிகளிலும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது இக்கூண்டானது கடலுக்குள் புயல் உருவாகும் என்பதை தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் தொடரும் கனமழை
தற்போது, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னை, நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதனை அறிவிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தும் படி கூண்டு ஏற்றப்பட்டது முதல் கூண்டானது புயல் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். அடுத்தடுத்து கூண்டுகள் ஏற்றப்பட்டால் புயல் வலுப்பெறும் என்று அர்த்தம்
கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதி இல்லை
புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 700 விசை படகுகளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரியில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
இன்னும் சில கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், படகுகள் கடலோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.