Friday, September 22, 2023
Homeதமிழ்நாடுகுலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா – பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா – பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.‌ தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வந்தனர்.

8-ம் நால் இரவில் கமல வாகனத்தில் கசலட்சுமி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

9-ம் நாளான நேற்று இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10-ம் நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

பல நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வந்தனர்.

பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து வந்தனர். தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தமிழக முழுவதும் பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து தசரா விட சிறப்பாக நடைபெற்றது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments