இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் அருள்மரியடார்சன் என்பவர் மின் வணிக உதவியாளர் பணிபுரிந்து வருகிறார்.
தங்கச்சிமடம் பகுதி சேர்ந்த டோஜோலியோன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கு இடையே அமைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க விண்ணப்பித்தார். இந்நிலையில் அந்த இடத்தை பார்வையிட்டு மதிப்பீட்டு பட்டியல் தயாரிக்க ரூ.5000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் டோஜோலியோன் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மறைந்திருந்தனர். அதனை தொடர்ந்து மேற்படி அருள்மரியடார்சன் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்த காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இது சம்பந்தமாக உதவி மின் பொறியாளர் அருள்மரியடார்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.