Saturday, November 9, 2024
Homeசெய்திகள்முந்தியது வாட்ஸ்அப்; பிந்தியது டெலிகிராம்; காரணம் இது தான்!

முந்தியது வாட்ஸ்அப்; பிந்தியது டெலிகிராம்; காரணம் இது தான்!

புதுடெல்லி: டெலிகிராமின் நிறுவனர் கைது செய்யப்பட்டு அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வாட்ஸ்அப் அதிவேகமாக உள்ளது. சேனலின் அறிமுகம் மற்றும் அடுத்தடுத்த புதுப்பிப்புகளால், வாட்ஸ்அப் செயலி டெலிகிராமைப் பின்னுக்குத் தள்ளி, மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

பணப் பரிமாற்ற மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய நாடான பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதன் அடிப்படையில் டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசும் டெலிகிராம் செயலியால் நடக்கும் சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதன் மூலம், டெலிகிராம் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில், சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: டெலிகிராம் செயலியுடன் ஒப்பிடும்போது, ​​வாட்ஸ்அப் முன்னேறி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் டெலிகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

பதிவிறக்கவும் இந்தியாவில் 2024ஆம் ஆண்டுக்குள் 6 கோடி பேர் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.2023ல் 8.1 கோடி பேரும், 2022ல் 9.1 கோடி பேரும், 2021ல் 10.8 கோடி பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.தற்போது டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எத்தனை பயனர்கள்? இருப்பினும், டெலிகிராம் பயனர்களின் அடிப்படையில் இந்தியா இன்னும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவில் 11 கோடி பேரும், ரஷ்யாவில் 3.5 கோடி பேரும், இந்தோனேசியாவில் 2.7 கோடி பேரும், அமெரிக்காவில் 2.6 கோடி பேரும், பிரேசிலில் 2.2 கோடி பேரும் டெலிகிராம் சேவையை பயன்படுத்துகின்றனர்.

பிளே ஸ்டோரில் இடம் என்ன?

டெலிகிராம் செயலி, ஆப்பிள் ஸ்டோரில் 3வது இடத்திலும், கூகுளின் பிளே ஸ்டோரில் 5வது இடத்திலும் உள்ளன.

வாட்ஸ்அப் அபரிமிதமாக வளர்ந்துள்ளது மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கையில் வாட்ஸ்அப் டெலிகிராமை முந்தியுள்ளது. வாட்ஸ்அப் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டெலிகிராம் பயன்படுத்துவோர் 11 கோடி மட்டுமே. ஆனால் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 53 கோடி.

டெலிகிராம் ஆரம்பத்தில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. சமீபகாலமாக சேனல்கள் உள்ளிட்ட புதிய அப்டேட்களை கொடுத்து அசைக்க முடியாத இடத்திற்கு முன்னேறியுள்ளது வாட்ஸ்அப்.

டெலிகிராம் வாட்ஸ்அப்பை முந்துவது கடினம். இந்தியாவில் டெலிகிராம் சேவையை சிலர் விரும்புவதற்கு பெரிய கோப்புகளை அனுப்பும் பயன்பாடு தான் காரணம். தொழில்முனைவோர் அதை சந்தைப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments