முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் கல்வி பயில ஊக்கத்தொகை
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோரின் சிறார்கள் உயர் கல்வியான IITS, IIMs & National Law Schools போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 2022-23-ம் கல்வியாண்டு முதல் உயர் கல்வி ஊக்கத் தொகையாக தொகுப்பு நிதியிலிருந்து ஆண்டிற்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக விபரம் தேவைப்படின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.