இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சிக்கான பாசறை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழ்நாட்டில் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்திட முடிவு செய்து 5 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல் கூட்டம் டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 26- ந் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியான 17 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் இரண்டாவது பயிற்சி பாசறை கூட்டம்
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது பயிற்சி பாசறை கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி இராமநாதபுரத்தில் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.இந்த கூட்டம் காலை முதலே தொடங்கி நடைபெறுகிறது. மாலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்