Wednesday, March 22, 2023
Homeராமநாதபுரம்தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வேலை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு

தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது  வெள்ளிக்கிழமைகளில் அன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு  வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை இல்லாதவர்கள் , ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை இல்லாதவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

இலவச வேலை வாய்ப்பு முகாம்

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை இல்லாதவர்கள்  மற்றும் மாற்றுத்திறனாளி  வேலை இல்லாதவர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு

பதிவு செய்யும் முறையில் அடிப்படை

விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை இல்லைதவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments