Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்கீழக்கரை கடலில் கழிவுநீர் கலப்பதால் சுற்றுச்சூழல், கடல் வளங்கள் பாதிப்பு

கீழக்கரை கடலில் கழிவுநீர் கலப்பதால் சுற்றுச்சூழல், கடல் வளங்கள் பாதிப்பு

கீழக்கரை கடலில் கழிவுநீர் கலப்பதால் சுற்றுச்சூழல், கடல் வளங்கள் பாதிப்பு

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவு நீரால் சுற்றுச்சூழல், கடல் வளங்கள் பாதிப்படைவதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்கரை வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

10 லட்சம் லிட்டர் – கழிவு நீர்

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 21 வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் மொத்தமாக தினந்தோறும் கடலில் கலந்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவு நீர் நேரடியாக கடலில் கலக்கிறது.

செத்து மிதக்கும் – மீன்கள்

லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழக்கூடிய கடலில் கழிவுநீர் கலப்பதால் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி அன்றாடம் மக்கள் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதால் கடலில் வாழக்கூடிய உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு விட்டு செத்து மிதக்கின்றனர்.

கடைக்கோடி – மாவட்டம்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரக்கூடிய மழை நீர், வெள்ள நீர் கடை கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்ட கடலில் தான் கடைசியாக கலக்கிறது. எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும் கடல் அதை தாங்கிக் கொண்டு உள்வாங்கிக் கொள்கிறது.

5 டன் மீன்கள் – இனப்பெருக்கம் குறைவு

கீழக்கரையை, ஏர்வாடி, மாயகுளம், களிமண்குண்டு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று நாள் ஒன்றுக்கு 5 டன் வரை மீன்கள் பிடித்து வந்து விற்பனை செய்து வந்தனர். காலப்போக்கில் கடலில் கலக்கக்கூடிய கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள் உட்கொள்ளுவதால் இனப்பெருக்கம் குறைந்து மீன் வரத்து குறைந்து விட்டது.

மீன்பிடி தொழில் – வேறு தொழில்

இதனால் கடலை நம்பி வாழக்கூடிய மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலை செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நிலத்தில் வாழக்கூடிய லட்சக்கணக்கான உயிரினங்களைப் போல கடலில் வாழக்கூடிய லட்சக்கணக்கான உயிரினங்களை பாதுகாப்போம்.

துர்நாற்றம்- சுற்றுலா 

கேரளா, ஆந்திரா பகுதிகளில் இருந்து ஏர்வாடி தர்காவிற்கு வரக்கூடிய வெளிமாநிலத்தவர் பொழுதை கழிப்பதற்காக கீழக்கரை பகுதி கடலுக்கு வந்து பொழுதை கழித்து விட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது கழிவுநீர் கலப்பதால் ஒருவித துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா வரக் கூடிய பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

மக்கள் – கோரிக்கை

எனவே கீழக்கரை நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை சுத்திகரிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல் கடல்வாழ் உயிரினங்களை மீட்டு இனப்பெருக்கம் செய்ய சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments